#image_title
2002ல் இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நடிகர் பார்த்திபனின் நடிப்பில் வெளியான காதல் காவியம் அழகி. இந்தப் படத்தில் நடிகர் பார்த்திபன், நந்திதா, தேவயானி தங்களது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். இயக்குனர் தங்கர் பச்சானுக்கும், நடிகர் பார்த்திபனுக்கும் இத்திரைப்படம் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்து, அவர்களது கெரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
காதலையும் இவ்வளவு உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடியுமா? என்று ஆச்சர்யப்படுத்தும் படைப்புகளில் இந்தப் படத்திற்கு கண்டிப்பாக முக்கியமான இடம் இருக்கும். அந்த அளவிற்கு சிறுவயதில் ஏற்படும் காதலையும் திருமணத்திற்கு பிறகு தான் சந்திக்கும் காதலியையும் பிறகு அவர்களுக்குள் ஏற்படும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை பார்த்தவர்கள், இந்தப் படத்தின் சண்முகம் மற்றும் தனலட்சுமி கேரக்டர்களை தங்களின் சொந்த வாழ்க்கையில் இணைத்து பார்த்தனர். 20 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்கள் மனத்தில் தற்பொழுதும் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறாள் இந்த ‘அழகி ‘ என்றாலும் அது மிகையல்ல. இத்திரைப்படத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் சிறு வயது பார்த்திபனாக நடிகர் சதீஷ் என்பவர் நடித்திருப்பார் .இந்த ஒரு படத்தில் மட்டுமே இவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் அவர், பரத் நடித்த ‘காதல்’ திரைப்படமும், தனுஷ் நடித்த ‘தேவதையை கண்டேன்’ என்ற படமும் தான் மிஸ் செய்த படங்கள் என்றும் கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் ‘அழகி பட சண்முகமா இது? ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…