சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

Spread the love

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தப் புகாரில் முகாந்திரம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தச் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், சேலம் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட மறுத்த உயர் நீதிமன்றம், கடந்த மார்ச் 23-ம் தேதி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், காவல்துறை விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கறாராக உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு நான்கு வார காலத்திற்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

48 minutes ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

55 minutes ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

1 மணத்தியாலம் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

1 மணத்தியாலம் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

1 மணத்தியாலம் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

2 மணத்தியாலங்கள் ago