#image_title
சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகை பூஜா குமாரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. காதல் ரோஜாவே’ திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை பூஜா குமார் அமெரிக்காவில் பிறந்தவர். ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
1997-ல் அவர் நடித்த இந்தப் படம் 2000-ல் தான் வெளியானது. இதன் பிறகு சில ஆங்கிலப் படங்களிலும், இந்தி படத்திலும் நடித்தவர். 2013-ம் ஆண்டு கமல்ஹாசனுடன் மீண்டும் தமிழில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘உத்தம வில்லன்’, ‘மீன் குழம்பும் மண் பானையும்’, ‘பிஎஸ்வி கருட வேகா’ (தெலுங்கு), ‘விஸ்வரூபம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவருக்குத் திருமணமான செய்தி ரகசியமாகவே இருந்து வந்தது. நடிகை பூஜா குமார் சமூக வலைதளங்களில் இருந்தாலும் இது பற்றி அவர் பகிர்ந்ததில்லை. அவரது கணவர் விஷால் ஜோஷி ‘ ஜாய்’ என்கிற திருமண ஏற்பாடுகளை செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு தற்பொழுது அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை பூஜா குமாரி. இவர் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலேயே இவ்ளோ கியூட்டா இருக்காங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…