‘அழகி’ பட சண்முகமா இது..? ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரே.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

2002ல் இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நடிகர் பார்த்திபனின் நடிப்பில் வெளியான காதல் காவியம் அழகி.  இந்தப் படத்தில் நடிகர் பார்த்திபன், நந்திதா, தேவயானி தங்களது  சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். இயக்குனர் தங்கர் பச்சானுக்கும், நடிகர் பார்த்திபனுக்கும் இத்திரைப்படம் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்து, அவர்களது கெரியரில்  முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

   

காதலையும் இவ்வளவு உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடியுமா? என்று ஆச்சர்யப்படுத்தும் படைப்புகளில் இந்தப் படத்திற்கு கண்டிப்பாக முக்கியமான இடம் இருக்கும். அந்த அளவிற்கு சிறுவயதில் ஏற்படும் காதலையும் திருமணத்திற்கு பிறகு தான் சந்திக்கும் காதலியையும் பிறகு அவர்களுக்குள் ஏற்படும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை பார்த்தவர்கள், இந்தப் படத்தின் சண்முகம் மற்றும் தனலட்சுமி கேரக்டர்களை தங்களின் சொந்த வாழ்க்கையில் இணைத்து பார்த்தனர்.  20 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்கள் மனத்தில் தற்பொழுதும் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறாள் இந்த ‘அழகி ‘ என்றாலும் அது மிகையல்ல. இத்திரைப்படத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் சிறு வயது பார்த்திபனாக நடிகர் சதீஷ் என்பவர் நடித்திருப்பார் .இந்த ஒரு படத்தில் மட்டுமே இவர் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் அவர்,  பரத் நடித்த ‘காதல்’ திரைப்படமும், தனுஷ் நடித்த ‘தேவதையை கண்டேன்’ என்ற படமும் தான் மிஸ் செய்த படங்கள் என்றும் கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் ‘அழகி பட சண்முகமா இது?  ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)