சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்ற முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் அருணா. தன் குரலால் அனைவரையும் கட்டிப்போட்ட தேன் குரல் இவருடையது. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சூப்பர் சிங்கர் வந்து, அழகாக பாடி டைட்டிலை அலேக்காக தூக்கினார் அருணா. ஆனால் இவரின் பயணம் எளிதானது அல்ல. இதன் பின்னால் பல வருட உழைப்பு உள்ளது.
இவரின் வாழ்க்கை குறித்து, இவரே பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், நான் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தேன், பெரிதாக வருமானமும் இல்லாத குடும்பம். டிவியில் சூப்பர்சிங்கர் பார்த்து நம் பேத்திகளும் இப்படி வரணும் என என் பாட்டி தான் எங்களை பாட்டு கிளாஸ் சேர்த்து விட்டார். அங்கு சென்று நாங்கள் பாட்டு கற்றுகொள்ளளவே இல்லை. நாங்கள் சும்மா இருப்போம், ஆனால் சில வருடங்களில் பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம் நானும் என் தங்கையும்.
நாங்கள் காலேஜ் படிப்பே இசை குறித்து படிக்க ஆசைப்பட்டோம், ஆனால் அம்மா ஒத்துக்கொள்ளவில்லை. சூப்பர்சிங்கரில் வாய்ப்பு கிடைத்தபோது வீட்டில் ஒரே ரணகளம் தான். எங்கள் அப்பா நீ போகக்கூடாது என சண்டையிட ஆரம்பித்து விட்டார். ஆனால் என் மாமா குடும்பத்தார் தான் என் அப்பாவை சமாதானப்படுத்தி என்னை அனுப்பி வைத்தார்கள்.
அதற்கு முன்பு வரை சினிமா பாட்டே பாடியது இல்லை, அதன்பின் தான் கற்றுக்கொண்டேன். சூப்பர்சிங்கரில் உள்ள இசை குழு உதவியாக இருந்தார்கள். இரவு முழுவது சங்கதி, ஸ்வரங்கள் சரியாக வரும் வரை இரவெல்லாம் பாடுவேன். ஒரு எபிசொடுக்காக அவ்வளவு கஷ்டப்படுவோம். ஆனால் டைட்டில் ஜெயித்ததும் அந்த கஷ்டமெல்லாம் மறந்து போனது என கூறியுள்ளார். உயர பறக்க கனவு கண்டனம் மட்டும் போதாது அதற்காக கஷ்டப்பட வேண்டும். சோதனைகளுக்கு பின்பே சாதனை வரும் என்பதை அருணா உணர்த்தியுள்ளார்.