ரகுவரனுக்கு இப்படி ஒரு சோதனையா..? முட்டி போட வைத்த படக்குழு.. ரேவதி பகிர்ந்த தகவல்..!!

By indhuramesh on வைகாசி 7, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் எத்தனையோ ஹீரோக்கள் போற்றப்பட்டாலும் இன்றளவும் வில்லன் நடிகராக தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருந்தவர் தான் ரகுவரன். இவர் கதாநாயகனாக சில படங்களில் நடித்திருந்தாலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் இவரை ரசிகர்கள் ரசித்திருப்பார்கள்.

அஜித், விஜய் கெத்துன்னா அப்போ நாங்க என்ன வெத்தா.. ரீ ரிலீஸ் ஆகும் தனுஷ், சூர்யா படங்கள்.. செம குஷியில் ரசிகர்கள்..!

   

அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ரகுவரன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் கதாபாத்திரமாக தான் எல்லா நேரமும் இருப்பாராம். வில்லனாக நடிக்கிறார் என்றால் அவரது வீட்டிலும் அதே கோபத்தை காட்டுவாராம்.

   

இப்படி கதாபாத்திரத்திற்குள்ளேயே சென்று நடிப்பவர் ரகுவரன். நடிப்பில் வெளியான சம்சாரம் அது மின்சாரம், முகவரி, பாட்ஷா, முதல்வன், அஞ்சலி உள்ளிட்டவை ரகுவரன் படங்களில் குறிப்பிடத்தக்கவை. இதில் அஞ்சலி படத்தில் ரகுவரனுடன் ரேவதி இணைந்து நடித்திருப்பார்.

 

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடித்திருக்கும் ரகுவரன் அந்த படத்தில் எவ்வளவு ஈடுபாடுடன் நடித்தார் என்பதை ரேவதி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். ரகுவரன் உயரமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ரேவதியோ அவ்வளவு உயரம் கிடையாது. அதோடு மூன்று குழந்தைகள்.

எனவே ரகுவரனுடன் அவர்கள் நிற்கும் போது கேமராவில் நான்கு பேரையும் பதிவு செய்வது கடினமான ஒன்றாக இருந்துள்ளது. இதனால் படத்தின் பல காட்சிகளில் ரகுவரன் முட்டி போட்டு நடித்தாராம். அப்படி சிரமப்பட்டு நடித்தாலும் கூட அவரது நடிப்பில் எந்த ஒரு குறையும் இருந்தது கிடையாது என ரேவதி பகிர்ந்துள்ளார்.