“தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு” வெளியான காரணம்.. போட்டி போட்டு வீடு கட்டுறாங்க.. அப்ப இதுதான் உண்மையா..?

By indhuramesh on மே 7, 2024

Spread the love

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதல் திருமணம் செய்து கொண்டார். தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

 

   

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் திருமண பந்தத்தில் இருந்து பிரிய போவதாக அறிவித்தார்கள். இது வதந்தியாக இருக்கலாம் என்று நினைத்தது கடைசியில் உண்மையான செய்தியாக மாறியது. இரண்டு தரப்பினரும் சம்மதம் தெரிவித்து பிரிந்தனர்.

   

#image_title

 

அவர்கள் பிரிந்ததற்கான காரணம் என்ன என்பது இன்றளவும் வெளியாகாமல் தான் இருக்கிறது. சில காரணங்களால் அவர்கள் பிரிந்து இருக்கலாம் என்ற சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ECR-ல் புதிதாக ஆடம்பரமாக வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக தனுஷ் போயஸ் கார்டனில் புதிய வீடு கட்டி தனது தாய் தந்தையரை குடியமர்த்தினார். ரஜினி அவர்கள் போயஸ் கார்டனில் வீடு கட்டிய போது அங்கு வந்த தனது தாய் தந்தையை ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் சரியாக கவனிக்காதது தான் தனுஷ் ஐஸ்வர்யா இடையேயான பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்றும் ஒரு புறம் கூறப்பட்டது.

அதனால் தான் தனுஷ் அதே போயஸ் கார்டனில் வீடு கட்டி தனது பெற்றோரை குடியமர்த்தினார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் தனுஷுக்கு சமமாக அதைவிட பெரிய அளவில் ECR-ல் ஐஸ்வர்யா ஒரு வீட்டைக் கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார்.

 

தனுஷ் வீடு கட்டிய போது தனது தந்தையை மரியாதைக்காக கூட அழைக்கவில்லை என்ற வேதனையில் தான் அதைவிட பிரம்மாண்டமாக வீடு கட்டி தனது தாய் தந்தையை அந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதன் மூலம் ஒரு வீட்டின் கிரகப்பிரவேசம் தான் ஐஸ்வர்யா தனுஷ் பிரிவிற்கு காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது பற்றி தனுஷ் அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்னால் தான் தெரியும்.