Connect with us

CINEMA

ஒரே படத்தில் 13 கெட்டப்களில் நடித்துள்ள சிவாஜி… பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்..

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

ஒரே படத்தில் சிவாஜி கணேசன் முன்னணி நடிகராகவும், திறமையான நடிகராகவும் அறியப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தமிழ் சினிமாவின் கொடுமுடியாக வலம் வந்தார். எம் ஜி ஆர் –சிவாஜி என்ற இருமைதான் தமிழ் சினிமாவில் கோலோச்சியது.

   

50 களில் தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்த சிவாஜி சமூகப் படங்கள் மற்றும் புராண இதிகாசப் படங்கள் என மாறி மாறி நடித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கட்டிப் போட்டிருந்தார். அப்படி அவர் நடித்த ஒரு புராணத் திரைப்படம்தான் மருதநாட்டு வீரன். 1961 ஆம் ஆண்டு ரிலீஸான இந்த படத்தை டி ஆர் ரகுநாத் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஜீவகன் எனும் இளவரசர் வேடத்தில் நடித்திருப்பார். இளவரசியான ரத்னாவுடன் காதலில் விழ அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சனைகளேக் கதைக்களம். இந்த படம் சிவாஜியின் ஹிட் படங்களில் ஒன்றில்லை. ஆனால் இந்த படம் ஒரு முக்கியமான அம்சத்துக்காக நினைவுகூரப்படுகிறது. அது என்னவென்றால் இந்த படத்தில் சிவாஜி கணேசன் 13 கெட்டப்களில் தோன்றியிருந்தார்.

சிவாஜி 9 வித்தியாசமான கெட்டப்களில் தோன்றிய நவராத்திரி திரைப்படம் அளவுக்கு இந்த படம் கவனிக்கப்படவில்லை. சிவாஜியின் 9 கெட்டப் படத்தை தாண்ட வேண்டும் என்றுதான் கமலஹாசன் தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்தார். ஆனால் அதையும் முறியடிக்கும் விதமாக சிவாஜி 13 கெட்டப்களில் மருத நாட்டு வீரன் படத்தில் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாதது.

Continue Reading

More in CINEMA

To Top