தமிழ் திரையுலகில் 80, 90 காலகட்டங்களில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் ரேவதி. 1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை திரைப்படத்தின் மூலமாக இவர் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிசியான நடிகையாக மாறினார்.
தமிழில் கை கொடுக்கும் கை, வைதேகி காத்திருந்தாள், மௌன ராகம், புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே நடிகை ரேவதி பேட்டி ஒன்றில் மண்வாசனை திரைப்படத்தில் நடித்த காட்சி ஒன்று பற்றி பகிர்ந்திருந்தார்.
கிராமப்புறத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் மண்வாசனை. இந்த படத்தின் கதாநாயகனாக பாண்டியன் நடித்திருப்பார். வினு சக்கரவர்த்தி ஒய் விஜயா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த இந்த மண்வாசனை திரைப்படம் சுமார் 200 நாட்கள் தியேட்டரில் ஓடி வெற்றி படமாக அமைந்தது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதும் கிடைத்தது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ரேவதி ஆற்றில் குளிக்க வேண்டியது இருக்கும். அப்போது அவர் இதுபோன்ற தன்னால் குளிக்க முடியாது என்று அழுது புலம்பி அடம்பிடித்துள்ளார்.
உடனே பாரதிராஜா வேறு சில பெண்களை ரேவதியின் அருகே குளிக்க வைத்து அவருக்கு தைரியத்தை கொடுத்து அந்த காட்சியை படம் ஆக்கியுள்ளார் இதனை நடிகை ரேவதியே பகிர்ந்துள்ளார்.