Connect with us

தமிழ்நாட்டின் சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்! இதுக்கு மேலயா ஒரு மோட்டிவேஷன் வேணும்!

INSPIRATION

தமிழ்நாட்டின் சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்! இதுக்கு மேலயா ஒரு மோட்டிவேஷன் வேணும்!

தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர் பன்னீர்செல்வம்.

கோவை மாவட்டம் சூலூர் என்ற கிராமத்தில் பிறந்த பனிமலர் தனது பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் முடித்தார். அதன் பின் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பனிமலருக்கு ஃபேஷன் டிசைனிங் மீது ஈடுபாடு வந்தது. அதன் பின் சென்னையில் ஃபேஷன் டிசைனிங் படிப்பில் சேர்ந்த பனிமலருக்கு சில காரணங்களால் அந்த படிப்பை முடிக்க முடியவில்லை.

   

அவரின் தமிழ் உச்சரிப்பை கவனித்துக்கொண்டிருந்த நண்பர்கள் பலரும் அவரை மீடியாவில் செய்தி வாசிப்பாளராக ஆக முயற்சி செய் என்று உற்சாகப்படுத்த சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் இன்டர்வ்யூக்காக சென்றார் பனிமலர். அவரின் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருந்தும் உடல்மொழி போதுமானதாக இல்லை என்பதால் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திலேயே டிரைனிங் கொடுத்தார்கள். அதன் பின் அவருக்கு செய்தி வாசிப்பாளராக ஆகும் வாய்ப்பு அமைந்தது.

 

மேலும் லைவ் நியூஸ் வாசிப்பதற்கான வாய்ப்பும் அவரை தேடி வந்தது. அதில் மிகவும் சிறப்பான செய்தி வாசிப்பாளராக பனிமலர் திகழ்ந்து வந்தார். அதன் பின் புதிய தலைமுறை ஊடகத்தில் பணியாற்றி வந்த பனிமலர் பன்னீர்செல்வம் தனது பெற்றோரின் ஆசைப்படி ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அவரது திருமண வாழ்க்கை கொஞ்ச காலம் கூட நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற வேண்டிய சூழல் வந்தது. எனினும் அதில் இருந்து மீண்டு வந்த பனிமலர் நியூஸ் 7 தொலைக்காட்சியில் பணிபுரியத் தொடங்கினார். அங்கே “பீனிக்ஸ் பெண்கள்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று அங்கே வெளிச்சத்திற்கு வராத சாதனை பெண்களை அடையாளப்படுத்தி “பீனிக்ஸ் பெண்கள்” என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இதனால் அப்பெண்களுக்கு மத்திய மாநில விருதுகள் கூட கிடைத்திருக்கின்றன.

அதன் பின் தனது மீடியா பணியை விட்டுவிட்டு தற்போது பெண் தொழில்முனைவோர்களின் தொழில்களை மேம்படுத்துவதற்காக தனது “பனிமலர் அங்காடி” என்ற சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் விளம்பரப்படுத்துதலுக்கான பணிகளைச் செய்து வருகிறார். இவ்வாறு தமிழ்நாட்டின் உள்ள சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பனிமலர் பன்னீர்செல்வம் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் இளம்பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் சிங்கப்பெண்ணாக இருக்கிறார்.

Continue Reading
To Top