Categories: சினிமா

அறிமுகம் சரியா அமையல… ஆனா ஒரே நாள் இரவுல எல்லாம் மாறிடுச்சு.. அஜித் சொன்ன வார்த்த பலிச்சது…. தேவயானியின் நாஸ்டால்ஜியா!

Spread the love

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், பெங்காளி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் தேவயானி ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னை வைத்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். திருமணமான பிறகு தேவயானி பல சீரியல்களிலும் நடித்து வந்தார்.

தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் 6 வருடம் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலிலும் தேவயானி நடித்தார். இப்போதும் அவர் சீரியலில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார். ஆனால் ராஜகுமாரனுக்கு அதன் பிறகு இயக்குனராகும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது தேவயானியின் இரண்டு மகள்களும் வளர்ந்து இப்போது பதின் பருவத்தை எட்டியுள்ளனர். இணையத்தில் தேவயானி தன் மகள்களோடு இருக்கும் புகைப்படம் கவனம் பெற்றது.

#image_title

இந்நிலையில் தேவயானி அளித்த ஒரு சமீபத்தைய நேர்காணலில் “நான் நடித்த முதல் சில படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. கைவசம் காதல் கோட்டை படம் மட்டும்தான் இருந்தது. அதனால்தான் அந்த படத்துக்குக் கடுமையாக உழைச்சோம். அந்த படம் ரிலீஸானதும் ஒரே நாளில் எல்லாம் மாறியது. உடனே 10 படங்கள் புக் ஆகின.

காதல் கோட்டை படத்தை பார்க்க செல்லும் போது அஜித் குடும்பத்தோடு படம் பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் சொன்னார் கண்டிப்பாக இந்த படம் உங்களைப் பெரிய ஸ்டார் ஆக்கும் என்று. இருவருமே ஸ்டார் ஆனோம்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

BIG NEWS: திமுகவின் முக்கிய புள்ளி தவெகவில் இணைந்தார்…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு….!

அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…

33 seconds ago

“கத்தி ரெண்டு பக்கமும் கூர்மையானது…” ஜாமீனில் வெளியே வந்ததும் முதல்வர் விஜய்க்கு ஓப்பனாக அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த மிரட்டல்…!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…

4 minutes ago

6 நிமிடத்தில் 43 அடி… பியூட்டி பார்லரில் அலறிய உரிமையாளர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…

8 minutes ago

“உனக்காக ஒரு கிப்ட் வச்சிருக்கேன்”… காதலனோடு ஹோட்டலில் இருந்த இளம்பெண்… நள்ளிரவில் வந்த வீடியோ கால்… ஹைதராபாத்தில் பதறவைக்கும் பின்னணி…!

ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'வி கிராண்ட்' ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா…

11 minutes ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்… 14 ஆண்டு கால தண்ணீர் சண்டை… பழிக்குப்பழியாக தந்தையின் தலை துண்டிப்பு… 5 வயது பிஞ்சு குழந்தை நசுங்கி பலி – அலறும் நெல்லை…!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன்…

13 minutes ago