#image_title
இசைஞானி இளையராஜாவுக்குப் பிறகு அவரது குடும்பத்தில் இருந்து கார்த்திக் ராஜா, பவதாரணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்தனர். இதில் கார்த்திக் ராஜாவுக்கு எல்லா திறமைகளும் இருந்தும் அவரால் முன்னணி இசையமைப்பாளராக வரமுடியவில்லை. பவதாரணி பாடகியாக பல பாடல்களை பாடியுள்ளார்.
ஆனால் இளையராஜாவின் வழியில் வெற்றிகரமான இசையமைப்பாளராக ஜொலித்து வருபவர் அவரின் கடைசி மகனான யுவன் ஷங்கர் ராஜாதான். அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், தற்போது கோட் படம் வரை நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர் யுவன் ஷங்கர் ராஜாதான். தன்னுடைய 16 ஆவது வயதில் பள்ளி மாணவனாக இருக்கும்போதே அவர் அரவிந்தன் படத்துக்கு இசையமைத்தார். ஆனால் அவரை ஒரு இசையமைப்பாளராக அடையாளம் காட்டியது வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம்தான். அந்த படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் ஹிட்டானாலும் படம் ப்ளாப் ஆனது. அதன் பின்னர் தீனா படம் மூலமாக வெற்றி பெற்று தற்போது வரை முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.
#image_title
இந்நிலையில் இயக்குனர் கரு பழனியப்பன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஏற்பட்ட ஒரு மோசமான தருணம் பற்றி பேசியுள்ளார். அதில் “என்னுடைய பார்த்திபன் கனவு திரைப்படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக யுவன்தான் ஒப்பந்தம் ஆனார். அது தயாரிப்பாளர் தியாகராஜன் சாரின் முடிவு. ஆனால் நான் யுவனை சந்திக்க இரண்டு முறை சென்ற போதும் அவர் என்னை சந்திக்கவில்லை.
இதுபற்றி அறிந்த தியாகராஜன் சார், எனக்கு போன் செய்து உடனே கிளம்பி வந்துவிடு என்றார். நான் அங்கு சென்றேன். அப்போது அவர் என்னிடம் ‘நீங்கள் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி சென்றுள்ளீர்கள். அதனால் நீங்கள் வந்ததும் வந்து கொஞ்சம் லேட்டாகும். காத்திருங்கள் என்றாவது சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எதையுமே அவர் செய்யவில்லை. எந்த இடத்திலும் பத்து நிமிடத்துக்கு மேல் காத்திருக்கக் கூடாது. அது யுவன் என்றில்லை. அது யாராக இருந்தாலும்’ என்றார்” எனப் பேசியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…
திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…