#image_title
அருண் விஜய் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகராவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி கன்னட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் அருண் விஜய். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் அருண் விஜய். இதற்கு பிறகு துள்ளித் திரிந்த காலம் பாண்டவர் பூமி ஆகிய வெற்றி படங்களில் நடித்திருந்தார் அரு்ண் விஜய். 2000 களின் நடுப்பகுதியில் சினிமாவில் சற்று சறுக்கல்களை சந்தித்த அருண் விஜய் 2010க்கு பிறகு ஏறுமுகத்தையே கண்டார்.
அதன்படி குற்றம் 23 செக்கச் சிவந்த வானம் மாஞ்சா வேலு யானை என்னை அறிந்தால் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் அருண் விஜய். தற்போது அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தை பாலா இயக்கியிருக்கிறார் என்பதால் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
அருண் விஜய் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்ற அருண் விஜய் அங்கு இருந்த முதியோர்களுடனும் குழந்தைகளுடனும் கேக் வெட்டி கொண்டாடி அவர்களுடன் உணவருந்தி மகிழ்திருக்கிறார் அருண் விஜய். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…
சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…