Actress Vaishnavi

தூக்கு போட்டு இறந்த நடிகை வைஷ்ணவி – 17 ஆண்டுகளுக்கு பின் தனது மனைவி குறித்து பேசிய நடிகர் தேவ் ஆனந்த்

By admin on கார்த்திகை 24, 2023

Spread the love

நடிகர் தேவ் ஆனந்த், நடிகை வைஷ்ணவி இருவருமே சின்னத்திரையில் பிஸியான நடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஒருகட்டத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். 2006ம் ஆண்டு, ஏப்ரலில் வைஷ்ணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தேவ் ஆனந்த் மீது வைஷ்ணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

 Actress Vaishnavi

   

இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதம் கோர்ட் விதித்தது. இதை எதிர்த்து அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் தேவ் ஆனந்துக்கு அளிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

   

 Actress Vaishnavi

 

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் தேவ் ஆனந்த், நடந்த உண்மை என்னவென்று, இறந்து போன என் மனைவி வைஷ்ணவிக்கு தெரியும். உயிரோடு இருக்கிற எனக்கு, நடந்த உண்மைகள் தெரியும். ஆனால் நான் சொன்னால், இவன் பொய் சொல்கிறான் என்று சொல்வார்களே தவிர, நான் சொல்வது உண்மை என யாரும் நம்ப போவது இல்லை. அப்போதும் எனக்கு கேர்ள் பிரண்ட்ஸ் இருந்தனர். இப்போதும் எனக்கு கேர்ள் பிரண்ட் இருக்கின்றனர். பெயர், புகழுக்கு பிறகு, காசும், பெண்களின் நட்பும் இயல்பான விஷயம்தான், என்று கூறியிருக்கிறார் நடிகர் தேவ் ஆனந்த்.