தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது. தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.
இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்தது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
படம் ரிலீசாவதற்கு முன்பு விஷால் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை திரையரங்குகள் மீது வைத்தார். படம் பார்த்த ரசிகர்கள் பலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும், ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் இணையத்தில் பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், ஏப்ரல் 26 ஆம் தேதியன்று ரிலீசான ரத்னம் திரைப்படம் முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இதைத்தொடர்ந்து சனிக்கிழமை 60 இலிருந்து 70 லட்சம் வரையில்தான் வசூல் செய்தது. மேலும் 3 வது நாளான ஞாயிற்றுக்கிழமை வெறும் 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ரத்னம் திரைப்படத்தின் வசூலோடு ஒப்பிடும் போது ரீ ரிலீசான ‘கில்லி’ திரைப்படத்தின் வசூல் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறலாம். அதாவது கில்லி திரைப்படம் இதுவரை 12 கோடி முதல் 15 கோடி வரை கலெக்ட் செய்துள்ளதாம். தற்பொழுது ரசிகர்கள் கில்லி படத்தின் 3 ல் 1 பங்கு வசூலை கூட ரத்னம் திரைப்படம் எட்டவில்லையே என்று கலாய்த்து வருகின்றனர்.