Connect with us

CINEMA

“நெல்லு சோத்தையே பாக்காதவர்கள்… டிஸ்கஷனில் தூங்குகிறார்கள்” – எழுத்தாளர் பாலகுமாரன் வீட்டுக்கு சென்று ஆர்ப்பார்ட்டம் செய்த உதவி இயக்குனர்கள்!

தமிழ் இலக்கிய உலகில் தன்னுடைய நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலமாக இளைஞர்களையும், இளைஞிகளையும் வெகுவாகக் கவர்ந்தவர் பாலகுமாரன். அவரது எழுத்துகள் ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியிருந்தது. அந்த அளவுக்கு காதல் கதைகள் எழுதி புகழ் பெற்ற அவர் திடீரென சினிமாவுக்குள் நுழைந்தார்.

இயக்குனர் கே பாலச்சந்தரிடம் சில படங்கள் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர் அதன் பின்னர் பாக்யராஜோடு இணைந்து பணியாற்றினார். அவர் கதை, திரைக்கதை வசனம் எழுதிய ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெற்ற போதும் அவர் அதன் பின்னர் படங்கள் இயக்கவில்லை.

   

மாறாக பல சூப்பர் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதினார். நாயகன், பாட்ஷா, காதலன், ஜெண்டில்மேன், உல்லாசம், முகவரி, மன்மதன், வல்லவன் என பல ஹிட் படங்கள் அவர் வசனத்தில் உருவானவை. அதன் பிறகு அவர் தன்னுடைய எழுத்துகளை ஆன்மீக ரீதியாக மாற்றிக்கொண்டார். இதனால் அவரை ரசிகர்கள் எழுத்துச் சித்தர் என்று கிட்டத்தட்ட வழிபடவே ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அவர் ஒரு பத்திரிக்கையில் சினிமா பற்றி எழுதும் போது அப்போதைய உதவி இயக்குனர்களை மிக மோசமாக சித்தரிக்கும் விதமாக எழுதியுள்ளார். இதைப் படித்த அப்போதைய உதவி இயக்குனர்கள் 400 பேருக்கு மேல் ஒன்று சேர்ந்து அவர் வீட்டுக்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இதுபற்றி நடிகரும் இயக்குனருமான கவிதா பாரதி எழுதியுள்ள முகநூல் பதிவு:-

நானும் ஒரு வாசகனாக பாலகுமாரனை வியந்து படித்துக் கடந்து வந்தவன்தான்.. அதன்பிறகு அவரைச் சந்திக்க நேர்ந்தகணம் துர்பாக்கியமானது.. ‘வறுமையில் உழலும் கிராமத்து இளைஞர்கள் சென்னை வந்து சினிமாவில் உதவி இயக்குநராகிவிடுகிறார்கள்.. ஊரில் நெல்லு சோத்தையே பார்க்காதவர்களுக்கு மூணு வேளை வயிறார சோறு கிடைத்ததும் டிஸ்கஷனில் உறங்கிவிடுகிறார்கள்., அவர்களுக்கு மூளை வேலை செய்வதில்லை,

மேலும் அத்தை மகளை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டுவந்து அவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள்..’ என்றெல்லாம் அவர் ஒரு பத்திரிகையில் எழுதிவிட, அது உதவி இயக்குநர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.. ஏறக்குறைய நானூறு பேர் ஊர்வலமாகப் போய் வாரன் ரோட்டிலிருந்த அவர் வீட்டை முற்றுகையிட்டோம்.. இன்று இயக்குராகிவிட்ட பலரும் அதிலிருந்தனர். இயக்குநர் சேரன்,  கண்ணெதிரே தோன்றினாள் இயக்குநர் ரவிச்சந்திரன், நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் இன்னொரு நண்பருடன் நானுமாக ஐந்து பேர்

போராட்டக்குழுவின் பிரதிநிதிகளாக அவர் வீட்டுக்குள் சென்றோம்.. மற்ற நால்வரும் அவருக்கு அறிமுகமானவர்கள் என்பதால் அவரோடு நாகரீகமாக வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.. நான் கொஞ்சம் கடுமையான சொற்களில் எங்கள் கோபத்தை வெளிப்படுத்தினேன்.. இப்போது நினைக்கும்போது தவிர்த்திருக்க வேண்டிய சொற்கள்தாம்.. ஆனால் அந்த நேரத்தில் ஒரு பெருந்திரள்க் கோபத்துக்குப் பொருத்தமான சொற்கள்

எனினும் அவர் அந்த விஷயத்தை மிக லாவகமாகக் கையாண்டு சுமுகமாக முடித்து வைத்தார். பின்னொருநாள் அவரோடு இணக்கமான சந்திப்பை விரும்பினேன், வாய்ப்புக் கிட்டவில்லை. நட்போடு கைகுலுக்குகிறேன் பாலகுமாரன்”

Continue Reading

More in CINEMA

To Top