தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்நடிகர் சூர்யா. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். சூர்யா ரசிகர்கள் பல வருடமாக காத்திருக்கும் திரைப்படம் தான் வாடிவாசல். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க இருக்கின்றார். அதனால் தான் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அது தரமான படமாக தான் இருக்கும் என்ற எதிர்பார்த்து ரசிகர்களுக்கு இருக்கின்றது. இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கின்றார். கலைப்புலி தாணு தயாரிக்கப் போவதாக பஸ்டு லுக் போஸ்டர் கூட வெளியானது.
ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் இல்லை அதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார். சூர்யாவும், சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். விடுதலை படம் முடிந்து தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் வெளியாக உள்ளது. இப்படி இருக்க சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பாரா? என்கின்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது.
அது மட்டும் இல்லாமல் வாடிவாசல் திரைப்படத்தில் அமீருக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட வந்தது. இதற்கு இடையில் சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையிலே சிறிய பிரச்சனையும் ஓடிக்கொண்டிருந்தது. இப்படி பல பிரச்சனைகள் வாடிவாசல் திரைப்படத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படம் வரவே வராது என்று சமீபத்தில் கூட ஒரு தகவல் வெளியாகி வந்தது.
தற்போது அனைத்து சமாதான பேச்சுவார்த்தைகளும், முடிக்கப்பட்டு இந்த திரைப்படம் இயக்குவது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் எடுப்பது உறுதியாக இருக்கின்றது. வருகிற செப்டம்பர் மாதம் இப்படத்திற்கான பட வேலைகள் துவங்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த திரைப்படத்தை இரண்டு வருடம் நடத்துவதற்கு வெற்றிமாறன் திட்டமிட்டு இருக்கிறாராம். ஒரு திரைப்படத்தை இரண்டு வருடங்கள் எடுத்தால் சூர்யாவின் நிலைமை என்ன ஆகும் என்பது தெரியவில்லை. ஏற்கனவே கங்குவா திரைப்படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வந்தது. கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இந்த திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில் சூர்யாவின் எந்த திரைப்படமும் இதுவரை வெளியாகாமல் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் சூழலில் வாடிவாசல் திரைப்படத்தை மட்டும் 2 ஆண்டுகள் எடுத்தால் மற்ற திரைப்படங்களில் எப்படி நடிகர் சூர்யா கவனம் செலுத்துவார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.