Connect with us

“இதுவரைக்கும் சினிமாவுக்காக என்ன கிழிச்சிருக்கீங்க.. அத சொல்ல என்ன உரிம இருக்கு?”- விஷாலை கடுமையாக விமர்சித்த காதல் சுகுமார்!

CINEMA

“இதுவரைக்கும் சினிமாவுக்காக என்ன கிழிச்சிருக்கீங்க.. அத சொல்ல என்ன உரிம இருக்கு?”- விஷாலை கடுமையாக விமர்சித்த காதல் சுகுமார்!

இயக்குனர் சங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதல்’. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் கண் கலங்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை குவித்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் காமெடி நடிகர் சுகமாரின் நடிப்பு நல்ல வரவேற்பு பெற்றது. மதுரையை சேர்ந்த சுகுமார் காதல் படத்தை தவிர வேறு சில படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் .

ஆனால் காமெடி நடிகராக தான் நினைத்த இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை.  நடிகர் காதல் சுகுமாரை நமக்கு நடிகராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு சில படங்களை இயக்குனராக இயக்கியும் உள்ளார். இது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆம் இவர் இயக்குனராக மாறி சும்மாவே ஆடுவோம், திருட்டு விசிடி போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஸ்டார் படத்தில் சுகுமார் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்குக் கம்பேக்காக அமையும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் இப்போதே சில புதிய படங்கள் கமிட் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்னால் தயாரிப்பாளர் யாரும் சிறு பட்ஜெட் படங்கள் தயாரிக்காதீர்கள் என்று கூறியது சர்ச்சைக் கிளப்பினார். அதற்கு அப்போதே காதல் சுகுமார் ஒரு மேடையில் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார்.

   

இந்நிலையில் இப்போது அவர் அளித்த ஒரு நேர்காணலில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் “சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்க வேண்டாம் என தயாரிப்பாளர்களுக்கு விஷால் சொல்கிறார். சிறு பட்ஜெட் படங்களால் எத்தனை பேர் வாழ்கிறார்கள் தெரியுமா? 100 கோடி போட்டு 200 கோடி எடுக்குறது பெரிய பட்ஜெட் இல்லை. ஒரு கோடி போட்டு 5 கோடி எடுக்குறதுதான் பெரிய பட்ஜெட் படம். விஷால் பேச்சால் நானே இயக்குனராக கமிட் ஆகியிருந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் கைவிட்டுப் போனார்கள்.

 

இப்படி பேசுவதற்கு முன்னால் விஷால் சினிமாவுக்காக என்ன செஞ்சு கிழிச்சு இருக்காரு… நடிகர் சங்கத்துல இருந்தீங்க.. தயாரிப்பாளர் சங்கத்துல இருந்தீங்க. அங்க என்ன செஞ்சீங்க? நடிகர் சங்க கட்டிடத்த கட்டுறன்னு சொன்னீங்க? அதோட பேஸ்மெண்ட்டே வீக்காகிப் போச்சு. சின்ன பட்ஜெட் படங்கள்தான் பல கலைஞர்களைக் காப்பாத்துது. ” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

 

Continue Reading
To Top