விஜய் படத்தை தயாரிக்க மறுத்ததா RRR பட நிறுவனம்.. அப்ப சம்பளம் தான் பிரச்சனையா..? வெளிவந்த காரணம்..!

By Mahalakshmi on மே 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி விஜய் என்றாலே ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம் தான். அவரது புகைப்படம் வெளியானாலே விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருவார்கள். ஆரம்பத்திலிருந்து தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார்.

   

சினிமாவில் கலக்கி வந்த இவர் தற்போது அரசியலில் கால் பதிக்க இருக்கின்றார் நடிகர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றது. விரைவில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

   

 

அது மட்டும் இல்லாமல் டிஎஜிங் தொழில்நுட்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கின்றார் நடிகர் விஜய். இந்த திரைப்படத்தை முடித்த கையோடு தளபதி 69ஆவது திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த படத்தை யார் இயக்குகிறார் மற்றும் யார் தயாரிக்கின்றார் என்பது தொடர்பான தகவல் தினந்தோறும் வந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை.

இந்த திரைப்படத்தை முதலில் ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் தான் தயாரிக்க போகிறார் என்று கூறப்பட்டு வந்தது. பொதுவாக எந்த ஒரு அக்ரீமெண்ட் போடாமல் படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்தால் விஜய்க்கு பிடிக்காது. அதனால் இந்த தயாரிப்பாளரை வேண்டாம் என்று கூறிவிட்டதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் தற்போது உண்மையான காரணம் அது இல்லையாம்.

GOAT திரைப்படத்தில் நடிகர் விஜய் 200 கோடி சம்பளம் வாங்குகிறார். அதனால் அடுத்த கட்டமாக தனது கடைசி படத்திற்கு 250 கோடு சம்பளம் கேட்டாராம். இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் அந்த தயாரிப்பாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளார். இருப்பினும் தனது முடிவில் விஜய் உறுதியாக இருந்ததால் அப்படத்திலிருந்து ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளரே தானாக விலகியதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்து இருக்கின்றார்.

author avatar
Mahalakshmi