தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்கும் நடைமுறையில் தமிழக அரசு மிக முக்கியமான சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இனிவரும் காலங்களில், தகுதியுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் கோரி விண்ணப்பிக்கும் அதே நாளிலேயே கடன் தொகை வழங்கப்பட வேண்டும் என கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்த்து, சாகுபடி காலத்திற்கு முன்னதாகவே விவசாயிகளுக்கு நிதி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த அதிரடி மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த புதிய நடைமுறையின்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் ஆவணங்கள் உடனடியாகச் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விவசாயிகளுக்கு அன்றைய தினமே கடன் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக, பயிர்க்கடன் ஒப்புதல் பெறுவதற்கு விவசாயிகள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த வெளிப்படையான மற்றும் விரைவானச் செயல்முறை, விவசாயிகளின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், கந்துவட்டிக் கொடுமையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…