காதலியின் கொடூர கொலை…! 25 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி சிக்கியது எப்படி…? போலீஸ் அதிரடி…!!

Spread the love

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள உம்பிலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராணி. இவரது கணவர் சாமிநாதன் முன்னாள் ராணுவ வீரர். ராணிக்கும் அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நல்லதம்பி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தகாத உறவு இருந்தது. இந்நிலையில், 2000ஆம் ஆண்டு ராணி அந்தத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு விலகிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நல்லதம்பி, ராணியுடன் தகராறு செய்து, கட்டையால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். அதன் பின்னர், அவர் தலைமறைவாகிவிட்டார்.

சுமார் 25 ஆண்டுகளாகக் கொலையாளி பிடிபடாமல் இருந்து வந்த இந்த வழக்கில், சேலம் எஸ்.பி. கௌதம்கோயல் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். கொலையாளி நல்லதம்பி (60) ஆந்திராவுக்குத் தப்பிச் சென்று அங்கு ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், அவர் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து உறவினர்களைப் பார்த்துச் சென்றதும் தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று உம்பிலிக்கம்பட்டிக்கு வந்த நல்லதம்பியை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தகாத உறவைத் துண்டித்துக் கொண்டதால் ராணியைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். 35 வயதில் கொலை செய்து தலைமறைவான கொலையாளியை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 60 வயதில் கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். விசாரணைக்குப் பின் நல்லதம்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Devi Ramu

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

1 மணத்தியாலம் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

1 மணத்தியாலம் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

1 மணத்தியாலம் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

1 மணத்தியாலம் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

1 மணத்தியாலம் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

1 மணத்தியாலம் ago