தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயின் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அவருக்கு பல கட்சிகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் நிலையில் விஜய் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். அதேசமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் கட்சியில் இருந்து விலகி பலரும் மாற்று கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். ஆனால் நடிகர் விஜய் தனது கட்சியை பலப்படுத்த பல முயற்சிகளை கையில் எடுத்துள்ளார்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் விஜயை பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழக வெற்றிக்கழகம் ஆர்ப்பாட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அப்படி என்றால் இறந்தவர்களின் ஓட்டுக்களை வாங்க விஜய் விரும்புகிறாரா? அவர் என்ன பேசுகிறார்? கொளத்தூரில் 9000 ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறது. அது ஸ்டாலினுக்கு கிடைக்க வேண்டுமா? கரூரில் செருப்பை வீசிய கட்சிக்கு விஜய் ஆதரவாக இருக்கிறாரா என்று நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…
மழைக்காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அப்படி ஒரு வழுக்கலான மலைச்சரிவுச் சாலையில் கார் ஒன்று மேலே ஏற…
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, தனது 43 வயதிலும் சிங்கிளாகவே கெத்து காட்டி வருகிறார். இவருக்கு எப்போது திருமணம்…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…