உலகத்திலேயே இந்த நாட்டுப் பணத்துக்கு தான் மதிப்பு அதிகமாம்.. அப்போ இந்திய பணத்துக்கு மதிப்பு இவ்ளோ தானா..?

By John

Updated on:

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கரன்சிகளையும், நாணயங்களையும் பயன்படுத்தி வருகிறது. ஒட்டு மொத்த உலகத்திற்கும் ஒரே மதிப்பு என்பது சாத்தியமற்றது. ஏனெனில் அங்குள்ள அரசாங்கங்கள், புவியியல் கூறுகள், சந்தை மதிப்பு, கனிம வளம் போன்றவற்றிற்கு ஏற்ப பொருளாதாரத்தைப் பொறுத்து கரன்சி, நாணயங்களின் மதிப்பு தினந்தோறும் மாற்றம் கொண்டதாகவே இருக்கிறது. ஐநா சபையானது 180 நாடுகளின் கரன்சிகளை செல்லும் என அறிவித்துள்ளது. அப்படியாக உலகில் அதிக மதிப்பு மிக்க கரன்சிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

c4f2d03b79deb83178b1a6ede42fd53b

அண்மையில் போர்பஸ் இதழானது வெளியிட்டுள்ள உலகின் மதிப்பு மிக்க கரன்சிகள் பட்டியல் இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டுள்ளது.  இதில் 270.23ரூபாய் மற்றும் $3.25 மதிப்புள்ள குவைத் தினார் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பஹ்ரைன் தினார் இதனைப் பின்தொடர்கிறது, இதன் மதிப்பு ரூ.220.4 மற்றும் $2.65.

   

ஓமானின் ரியால் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது  (ரூ. 215.84 மற்றும் $2.60), அதைத் தொடர்ந்து ஜோர்டானிய தினார் (ரூ. 117.10 மற்றும் $1.141), ஜிப்ரால்டர் பவுண்ட் (ரூ. 105.52 மற்றும் $1.27), பிரிட்டிஷ் பவுண்ட் (ரூ. 105.54 மற்றும் $1.27), கேயர்மேன் தீவு (ரூ. 9.77), மற்றும் $1.20), சுவிஸ் பிராங்க் (ரூ. 97.54 மற்றும் $1.17), மற்றும் யூரோ (ரூ. 90.80 மற்றும் $1.09) போன்றவை முன்னணியில் இருந்து வருகிறது.

எம்.ஜி.ஆருடன் முகமது அலி.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இரு ஜாம்பவான்கள்

மேலும் உலகம் முழுவதும் வர்த்தகத்தில் பயன்படும் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.83.10 மதிப்பைக் கொண்டுள்ளது. மேலும் உலகளாவிய புகழ் மற்றும் முதன்மை இருப்பு நாணய நிலை இருந்த போதிலும், அமெரிக்க டாலர் உலகின் வலுவான நாணயங்களில் 10 வது இடத்தில் உள்ளது என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிடுகிறது.

இதுமட்டுமின்றி சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணையதளத்தின் சமீபத்திய மாற்று விகிதங்களின்படி, இந்தியா நாணய மதிப்பில் 15வது இடத்தில் உள்ளது, ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ரூ.82.9 என பட்டியலிடப்பட்டுள்ளது. குவைத் தினார், 1960 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தொடர்ந்து அதன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

1000 F 522686932 CsjfZlGvToecEk6QdpZK6gRuWUqmu2lq

ஏனெனில் குவைத்தின் பொருளாதார வலுவுக்குக் காரணம், ஏராளமான எண்ணெய் வளம் மற்றும் வரியில்லா அமைப்பு ஆகியவற்றால் அரசாங்கம் செயல்படுகிறது. மேலும் ஃபோர்ப்ஸ் இதழானது சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனின் நாணயமான சுவிஸ் பிராங்கை உலகின் மிகவும் நிலையான நாணயமாக பரவலாகக் கருதுகிறது.

மேற்கண்ட பட்டியலானது ஜனவரி 01, 2024 தேதியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டதாகும்.

author avatar