இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

By Mahalakshmi on மே 5, 2024

Spread the love

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். முதல் திரைப்படத்தில் சிறப்பாக இசையமைத்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதன்படி வத்திக்குச்சி, திருமணம் என்னும் நிக்காஹ், குட்டி புலி, அமரகாவியம், உத்தம வில்லன், பாபநாசம், தீரன் அதிகாரம் ஒன்று, அறம், ராட்சசன் என 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்து இருக்கின்றார்.

   

இவர் சமீபத்தில் குரங்கு பெடல் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் தொடர்பான பேட்டியில் கூறிய ஜிப்ரான் தனது பெயரை மாற்றிக் கொண்டதை பற்றி கூறியிருக்கின்றார். அதாவது இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு முஸ்லிம். சமீபத்தில் ஹிந்துவாக மாறிவிட்டதாகவும் சட்டப்பூர்வமாக அனைத்தையும் மாற்றிவிட்டேன். தன்னுடைய பெயரை மற்றும் ஜிப்ரான் என்று பயன்படுத்தி வந்ததாக தெரிவித்தார்.

   

 

குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என எனது புது பெயரை அறிமுகம் செய்திருக்கின்றார். இது குறித்து அவர் தெரிவித்த போது குரங்கு பெடல் படம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. இதனால் இந்த படத்தில் தனது புது பெயரை சேர்த்து விடலாம் என்று முடிவு செய்தேன். வைபோதா என்றால் விழித்தெழுதல் என்று பொருள் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.