தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு, அஜித் என பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கின்றார். இருப்பினும் பட்டிதொட்டியெல்லாம் இவரை பிரபலமாக்கியது சிம்புவின் மாநாடு திரைப்படம் தான்.
அந்த திரைப்படத்தில் இவர் நடிக்கவில்லை என்றாலும் வெந்து தணிந்தது காடு எஸ்டிஆர்-க்கு வணக்கத்தை போடு என்ற வசனத்தின் மூலமாக பிரபலமாகிவிட்டார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நல்ல வரவேற்பை பெற்றார். எதார்த்தமாக பேசி ரசிகர்களால் வரவேற்கப்பட்ட இவர் நிறைய நாட்கள் போட்டியில் நீடித்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கூல் சுரேஷ் தனக்கு கூல் என்ற பெயர் எப்படி வந்தது என்பது பற்றி கூறியிருக்கின்றார். எழில் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படத்தில் இருவது கோடி நிலவுகள் சேர்ந்து பெண்மையானதோ என்ற பாடலில் நடிகர் விஜய் கூல் என்ற செயினை அணிந்திருந்தார்.
நான் அப்போது சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படத்தை பார்த்துவிட்டு அந்த மாதம் சம்பளம் வாங்கி அதே போன்ற செயினை வாங்கி போட்டுக் கொண்டேன் என்று கூறியிருந்தார். அதிலிருந்து தான் தனது பெயர் கூல் சுரேஷ் என்று மாறியதாக அந்த நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.