இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

By Mahalakshmi on வைகாசி 5, 2024

Spread the love

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும் பணம் மூலமாக சரி செய்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன். இவர் தமிழில் குறிப்பிட அளவு திரைப்படங்களில் தான் தயாரித்திருக்கின்றார்.

   

புதிய தென்றல் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பின்னர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மாணிக்கம் நாராயணன் இளையராஜாவுடன் இருக்கும் நட்பு குறித்து பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது; “நான் 10 படம் எடுத்துள்ளேன். அதில் ஒரு படத்தில்தான் அவர் இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.

   

 

ஆனால் இன்றைய சூழலில் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பன் என்றால் அது நான்தான். நான் ஒரு போன் அடித்தால் போதும் எங்கு இருந்தாலும் உடனே எடுத்து பேசுவார். இளையராஜா உடன் நிறைய பேர் பிரண்டாக இருக்க முடியாது. அவர் ஜோசியம் பார்க்கும்போது கூட என்னை அருகில் உட்கார வைத்து கொள்வார்.

அந்த அளவுக்கு என்னை விரும்புகிறார். அதுமட்டுமில்லாமல் இடையில் நான் அவருக்கு பணம் சம்பந்தமாக உதவி செய்திருந்தேன். ஆனால் அது மிகப்பெரிய சிக்கலில் முடிந்து விட்டது. இருப்பினும் அவர் தன்னுடன் நட்பாக பழகி வருகிறார்” என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார்.