தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அதில் வேட்டையின் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் மிரட்டியுள்ளார். சந்திரமுகி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இத்திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
சந்திரமுகி 2 படத்தின் புரமோஷனுக்காக ஐதராபாத் சென்றிருந்த படக்குழுவினர், அங்குள்ள பிரசித்தி பெற்ற பெத்தம்மா தல்லி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். படம் வெளியாகி வெற்றியடைய வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கங்கனா ரனாவத், மகிமா நம்பியார் மற்றும் இயக்குனர் பி வாசு ஆகியோர் இந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…