செல்போன்களில் தொடர்ந்து வரும் தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்களவையில் விளக்கமளித்த மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி டாக்டர் பெம்மசானி சந்திரசேகர், AI மூலம் ஸ்பேம் தகவல்களை அனுப்புபவர்களைக் கண்டறிந்து, தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் அவர்களின் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய 4 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் AI அடிப்படையிலான ஸ்பேம் கண்டறியும் அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளன. ஒரே நபருடன் தொடர்புடைய 5 அல்லது அதற்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் 10 நாட்களுக்குள் சந்தேகத்திற்குரிய வகையில் ஸ்பேம் தகவல்களை அனுப்பியது AI மூலம் கண்டறியப்பட்டால், அந்த நபரின் வாடிக்கையாளர் விவரங்கள் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்தால் மீண்டும் தீவிரமாகச் சரிபார்க்கப்படும்.
விசாரணையில் ஸ்பேம் தகவல்களை அனுப்பியது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட எண்கள் மற்றும் வசதிகளின் ‘அவுட்கோயிங்’ சேவை உடனடியாகத் துண்டிக்கப்படுவதோடு, அந்த நபர் கருப்புப் பட்டியலிலும் சேர்க்கப்படுவார். ஸ்பேம் அனுப்புவதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை தொடங்கிய முதல் ஒரு வாரத்திலேயே 2 லட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…
தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…
ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…