“என்னை உறுப்பினரா சேர்த்துக்கோங்க” OPS-ஐ கெஞ்ச வைத்த கொடுமை… EPS செய்த பாவம்… உண்மையை போட்டுடைத்த சிவி சண்முகம்..!!

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு வலுவான அதிமுகவே தங்களின் தற்போதைய தேவை என்று வலியுறுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவதற்கு முன்பாக, தமக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் வேண்டாம் என்றும், ஒரு சாதாரண உறுப்பினராக மட்டுமாவது இருக்க அனுமதிக்குமாறும் எடப்பாடி பழனிசாமியிடம் கடைசியாக ஒருமுறை கெஞ்சிக் கேட்டதாக அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி ‘முடியவே முடியாது’ என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய சி.வி.சண்முகம், தற்போது அனைவரையும் ஒன்றிணையக் கோரி எடப்பாடி அறிக்கை வெளியிடுவது “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” செய்வது போன்றது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசியபோது, அதனைத் தடுத்துக் கெடுத்ததே எடப்பாடி பழனிசாமிதான் என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேமுதிக மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற கூட்டணிக் கட்சிகளை எடப்பாடி துளியும் மதிக்கவில்லை என்றும், அனைவரையும் அரவணைத்துச் செல்லத் தவறிய இந்தத் தவறான அணுகுமுறையால்தான் அதிமுக தொடர்ந்து தனது வாக்கு சதவீதத்தை இழந்து, தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.

Soundarya

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

7 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

7 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

7 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

7 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

8 மணத்தியாலங்கள் ago