விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிலவி வந்த அதிகாரப் போட்டி தற்பொழுது முடிவுக்கு வந்து, புதிய தலைமைப் பொறுப்பேற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. விழுப்புரம் மாவட்ட அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகத்தின் கைவசம் இருந்த அதிகாரம் தற்பொழுது அவரை விட்டு நழுவியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பிடம், விழுப்புரம் அதிமுக அலுவலகத்தின் சாவி முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அலுவலகத்தைப் பயன்படுத்துவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் தரப்பிலிருந்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாமல், கட்சி அலுவலக ஊழியர் மூலம் சாவி பசுபதியின் இல்லத்திற்கே கொண்டு சென்று வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆக்ரோஷமான அரசியலுக்குப் பெயர் போன சி.வி.சண்முகம் இந்த விவகாரத்தில் அமைதி காப்பதுடன், அலுவலகத்தில் இருந்த அவரது பேனர்களும் அகற்றப்பட்டுள்ளது தொண்டர்களிடையே ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…