நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்த தண்டபாணி, மகள் நந்தினி (21). திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் தூரத்து சொந்தமான இராசிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜய் (26) என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அஜய், நந்தினி வீட்டில் பெண் கேட்டு பார்த்து உள்ளார். பெற்றோர்கள் மறுத்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். வழக்கம்போல் நேற்று நந்தினி கல்லூரிக்கு சென்றுள்ளார். போகும் வழியில் அஜய்க்கு கால் செய்து என்னை கூட்டிக்கொண்டு போய்விடு இல்லையெனில் வேற யாருக்காவது என்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று அழுதுள்ளார்.
அதனால் அஜய் சில உறவினர்களை கூட்டிக்கொண்டு வாடக காரில் நந்தினியின் கல்லூரிக்கு அருகே வந்துள்ளார். நந்தினியின் தந்தையும் நந்தினியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். பஸ்ஸிலிருந்து இறங்கிய நந்தினி, அஜய் கூட்டிக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தினியின் தந்தை தண்டபாணி காரை வழிமறித்து கூச்சலிட்டு உள்ளார். பின்பு உறவினர்களுக்கு கால் செய்து வரவழைத்துள்ளார். இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி கண்டிப்பாக நம்மை பிரித்து விடுவார்கள் என்று அச்சத்தில் இருந்தன. நந்தினியை கூட்டிக்கொண்டு சென்று விட்டாள் இனி நம்மளோட பேசமாட்டார், கல்லூரிக்கும் அனுப்ப மாட்டார்கள் என்று அஜய் பயந்தார்.
அஜய் தயாராக வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டி விட்டு மோதிரத்தையும் நந்தினிக்கு அணிவித்துள்ளார். இதைப் பார்த்த நந்தினி உறவினர்கள் காரை அடித்து நொறுக்கி உள்ளனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து காதல் ஜோடியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவருமே மேஜர் என்பதால் இரு வீட்டாரையும் சமாதானம் செய்து போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…
தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தில்…
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து…
திராவிட வெற்றி கழக தலைவரும், மதிமுகவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான மல்லை சத்யா செய்தியாளர்களைச் சந்தித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு விருந்தினராகத்…
தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பேச்சு அரசியல்…