Connect with us

TRENDING

அடேங்கப்பா.., ஒரு நாளுக்கு இத்தன கோடியா.. நெஞ்சடைக்க வைக்கும் கமலின் பிக் பாஸ் சம்பளம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி  மக்களால் பரப்பரப்புடனும்  மிகுந்த ஆர்வத்துடனும் பார்க்கப்படும் நிகழ்ச்சியாகும், இதில் தொகுப்பாளராக நடிகர் கமலஹாசன் இருக்கிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 7 வருடங்களாக நடத்தப்படும் மிகப்பெரிய ஷோவாக உள்ளது.

   

அந்த ஷோக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருவதும், ட்ரொல் செய்து வருவதும் என இருக்கிறார்கள். தற்போது நடந்து வரும் 7 சீசனில் கமலஹாசனையும்  சேர்த்து ட்ரோல்  செய்கிறார்கள். அதனால் தொகுப்பாளராக கமலஹாசன் அடுத்த சீசனில் வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் Thug Life  மற்றும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 போன்ற படங்களை நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அதில் பிரேக் கிடைக்கும் நேரத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை நாளான சனி  மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் மட்டும் கமல் எபிசோடுகள் டிவியில் ஒளிபரப்பாகும். ஆனால் அந்த இரண்டு நாள் சூட்டிங் ஒரே நாளில் தான் எடுத்து முடிப்பார்கள், இந்த ஒரு நாள் ஷூட்டிங்கிற்காக  கமலுக்கு 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in TRENDING

To Top