Connect with us

HISTORY

முகலாய சாம்ராஜ்யத்தின் முற்றுப்புள்ளியாக வாழ்ந்த கடைசி அரசர், ஆனால் அந்த விஷயத்தில் இவர்தான் முதல் முகலாய மன்னர்! இதுல இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

இந்திய வரலாற்றில் முகலாயர்களை தவிர்த்துவிட்டு நாம் நமது வரலாற்றை எழுதிவிடமுடியாது. பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் ஔரங்கசீப் காலகட்டத்தில் ஆஃப்கன் முதல் தென் இந்தியா வரை அதன் நிழல் நீண்டிருந்தது. ஆனால் ஔரங்கசீப்பிற்கு பிறகு வந்த மன்னர்கள் முகலாய சாம்ராஜ்ய வரலாற்றில் தனித்துவம் பெறவில்லை.

ஔரங்கசீப்பை தொடர்ந்து அடுத்தடுத்து 15 மன்னர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் முகலாய சாம்ராஜ்யத்தின் சரிவு ஔரங்கசீப்பிற்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ஆசம் ஷாவில் இருந்து தொடங்கியது. பாபரால் 1526 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் 1857 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

   

அந்த சமயத்தில் முகலாய மன்னராக இருந்தவர் இரண்டாம் பகதூர் ஷா. இவர்தான் முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர். இவர் முகலாய மன்னராக பதவியில் இருந்தபோது டெல்லியும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகள் மட்டுமே இவரது கைவசத்தில் இருந்தன. அந்த சமயத்தில் கிழக்கிந்திய கம்பெனி தனது ஆளுகையை நிலைநாட்டியிருந்தது.

அந்த கம்பெனி ஆட்சிக்கு எதிராக தோன்றிய சிப்பாய் புரட்சியில் முகலாய மன்னரான இரண்டாம் பகதூர் ஷாவின் பங்கும் அதிகளவில் இருந்தது. ஆதலால் ராஜ துரோக குற்றத்திற்காக பிரிட்டிஷார் இவரை பர்மாவில் உள்ள ரங்கூனுக்கு நாடு கடத்தினார்கள். 300 ஆண்டுகளுக்கும் மேல் ஆஃப்கன், பாகிஸ்தான் உட்பட்ட இந்தியாவின் அகண்ட நிலபரப்பை ஆண்ட முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி வாரிசு ரங்கூனில் ஒரு பழைய பாழடைந்த மர வீட்டில் 1862 ஆம் ஆண்டு அஸ்தமனம் ஆனது.

எனினும் கடைசி முகலாய மன்னரான  இரண்டாம் பகதூர் ஷாவை பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க செய்தி வரலாற்றில் பதிவாகியுள்ளது. அதாவது இவர் கடைசி முகலாய மன்னராக இருந்தாலும், புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல் முகலாய மன்னர் இவர்தான். அவருக்கு முன்பிருந்த மன்னர்களுக்கு காலம் அந்த வாய்ப்பை அளிக்கவில்லை. மற்ற முகலாய மன்னர்களின் ஓவியங்கள் மட்டுமே நமக்கு கிடைக்க இரண்டாம் பகதூர் ஷாவின் புகைப்படம் நமக்கு கிடைக்கிறது. இவ்வாறு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல் முகலாய மன்னராக திகழ்ந்துள்ளார் இரண்டாம் பகதூர் ஷா.

author avatar
Continue Reading

More in HISTORY

To Top