தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது முழுமையான தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிடாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு ஆளுங்கட்சியான திமுகவும் இம்முறை இந்த வாக்குறுதியைத் தவிர்க்கக்கூடும் என்று ஒருபுறம் எதிர்பார்க்கப்பட்டாலும், அரசியல் விமர்சகர்கள் மாற்றுக்கருத்தைக் கொண்டுள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலைப் போலவே, 5 சவரன் வரை அடமானம் வைத்த ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், ஒரு வியூகமாக திமுக மீண்டும் ‘நகைக்கடன் தள்ளுபடி’ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதிமுகவின் அறிக்கையில் இது இடம்பெறாதது திமுகவிற்கு ஒரு சாதகமான களத்தை உருவாக்கிக் கொடுத்துள்ள நிலையில், இறுதி நேரத்தில் இந்த அதிரடி அறிவிப்பை ஒரு தேர்தல் ‘மாஸ்டர் ஸ்டிரோக்’ ஆக திமுக பயன்படுத்தக்கூடும் என்பதே தற்போதைய அரசியல் வட்டாரங்களின் கணிப்பாக உள்ளது.
ஈரோட்டில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி…
புதுச்சேரி வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்ற ஓட்டுநர், மதுபோதையில் உறவினரின் ஹோட்டலுக்குச் சென்றபோது கொதிக்கும் வெந்நீர் அண்டாவில்…
அசாம் மாநிலம் கவுகாதியைச் சேர்ந்த 30 வயதான ராமானுஜ் கோஸ்வாமி என்பவர், தனது மனைவி ரியா தாலுக்தாரை (25) கொடூரமாகக்…
தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…