“சினிமா வேற.. நிஜம் வேற.. தூங்கி எழுந்தா எல்லாம் கலைஞ்சுடும்”… விஜய்யை ‘நாக்-அவுட்’ செய்த எடப்பாடி… அலறும் அரசியல் கட்சிகள்….!

Spread the love

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் களம், நான்கு முனைப் போட்டியால் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமு‌க, அதிமுக, நாம் தமிழர் மற்றும் முதல் முறையாகக் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எனப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தாம்பரத்தில் மேற்கொண்ட பிரச்சாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் பெயர் குறிப்பிடாமல் அவரை “சினிமா வாழ்க்கை வேற, நிஜ வாழ்க்கை வேற” என மறைமுகமாகச் சாடிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, அவர்களை ஓரிடத்திற்கு வரவழைத்து விஜய் சந்திப்பு நடத்தியதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். “இறந்தவர்கள் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொல்வதே மரபு, ஆனால் ஒரு கட்சி அவர்களை வரவழைத்து அனுதாபம் சொல்கிறது; இது என்ன மாதிரியான அரசியல்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், இதையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய தருணம் இது என்றும் ஆவேசமாகப் பேசினார்.

திரைப்படத் துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதை விமர்சித்த எடப்பாடி, “சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு சாதனம் மட்டுமே. சினிமாவில் பார்ப்பது எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்த மாயை. நிஜ வாழ்க்கை என்பது கடினமானது, யதார்த்தமானது. கனவில் காணும் காட்சிகள் தூங்கி எழுந்ததும் மறைந்துவிடும், அதுபோலவே சினிமா அரசியலும் எடுபடாது” எனத் தொண்டர்களிடையே உரையாற்றினார். மக்கள் சினிமா கவர்ச்சியில் ஏமாறாமல், நிஜ வாழ்வின் தேவைகளைப் புரிந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மற்றொருபுறம், பாஜக – அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பிருப்பதாக நிலவிய வதந்திகளுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விஜய்யை கூட்டணியில் இணைத்தால் அது அதிமுக-பாஜகவின் வாக்கு வங்கிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என அமித்ஷா தெளிவுபடுத்தியுள்ளார். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க விஜய் தயாராகி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நேரடித் தாக்குதல் தமிழகத் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

1 minute ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

10 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

19 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

29 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

39 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

44 minutes ago