“அடேய்… மிலிட்டரியையே பார்த்தவங்க நாங்க… நீங்க அப்ப பிறக்கவேயில்லை… மாணிக்கம் தாகூரை நார்நாராகக் கிழித்த அன்புமணி… அரசியலில் பரபரப்பு…!!”

Spread the love

மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸும், பொதுச்செயலாளராக வடிவேல் இராவணனும், பொருளாளராக திலகபாமாவும் மீண்டும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். அரசியலில் இருந்து ராமதாஸ் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பேராசிரியர் தீரன் மற்றும் பு.த.அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அன்புமணி முன்னிலையில் மீண்டும் இணைந்து இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு நிலவிய உட்கட்சிச் சூழல் மாறி, தற்போது அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அன்புமணி, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் களத்தில் மக்களுக்காக வேகமாகச் செயல்படும் ஒரே கட்சி பாமக தான் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் பாமக தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய அன்புமணி, கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸும் பாஜகவும் இணைந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வரவிடாமல் கூட்டுச் சதி செய்வதாகக் குற்றம்சாட்டினார். இதுகுறித்துத் தான் வெளியிட்ட அறிக்கைக்கு, சட்டை மடித்து ஆவேசப்பட்ட காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “நாங்கள் ராணுவத்தையும் துப்பாக்கிச்சூட்டையும் பார்த்தவர்கள்; அமைதியான முறையில் ஆக்கபூர்வ அரசியல் செய்து வருகிறோம்,” என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், காங்கிரஸ் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் பதவியைக் கூட வெல்ல முடியாது என்றும் விமர்சித்தார்.

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் ராகுல் காந்தி மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நியாயத்தைப் பேசுவாரா என்று கேள்வி எழுப்பிய அன்புமணி, மேகதாது விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அளித்த பதில் தமிழ்நாட்டிற்குச் செய்யப்பட்ட துரோகம் என்றும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்குவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் வரவிருக்கும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாகவும் கூறி, பாமகவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

Swetha

Recent Posts

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

8 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

26 minutes ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

33 minutes ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

40 minutes ago

அடச்சீ… இன்சூரன்ஸ் ரூ.44 லட்சத்திற்கு ஆசைப்பட்டு… மனைவியை காரை ஏற்றி கொன்ற கணவன்… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…

48 minutes ago

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

1 மணத்தியாலம் ago