தி ஹண்ட்ரட் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் மற்றும் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் மகளிரணிக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா அற்புதமாகக் கேட்ச் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எதிரணியின் பேட்டர் பேஜ் ஸ்கோல்ஃபீல்ட் அடித்த பந்தை, தீப்தி சர்மா இடதுபுறமாக ஓடிச் சென்று ஒற்றைக் கையால் டைவ் அடித்துப் பிடித்து அவரை 5 ரன்களில் வெளியேற்றினார். இந்த அபாரமான முயற்சியால் பந்துவீச்சாளர் ஹேனா பேக்கருக்கு முக்கியமான விக்கெட் கிடைத்ததுடன், தீப்தியின் இந்தத் துரிதமான கேட்ச் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணிக்குத் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் 88 ரன்கள் குவித்து உதவினார். தீப்தி சர்மா பந்துவீச்சிலும் 20 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துக் கட்டுக்கோப்பாகப் வீசியபோதிலும், போட்டியின் முடிவில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி கைநழுவிப் போனாலும், தீப்தி சர்மா பிடித்த அந்தப் பறக்கும் கேட்ச் இத்தொடரின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…