செம மாஸ்..!  மைதானத்தை அதிரவைத்த பறக்கும் கேட்ச்…!  எதிரணியைக் கதறவிட்ட தீப்தி சர்மாவின் மிரட்டலான சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆடி 29, 2026

Spread the love

தி ஹண்ட்ரட் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் மற்றும் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் மகளிரணிக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா அற்புதமாகக் கேட்ச் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எதிரணியின் பேட்டர் பேஜ் ஸ்கோல்ஃபீல்ட் அடித்த பந்தை, தீப்தி சர்மா இடதுபுறமாக ஓடிச் சென்று ஒற்றைக் கையால் டைவ் அடித்துப் பிடித்து அவரை 5 ரன்களில் வெளியேற்றினார். இந்த அபாரமான முயற்சியால் பந்துவீச்சாளர் ஹேனா பேக்கருக்கு முக்கியமான விக்கெட் கிடைத்ததுடன், தீப்தியின் இந்தத் துரிதமான கேட்ச் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணிக்குத் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் 88 ரன்கள் குவித்து உதவினார். தீப்தி சர்மா பந்துவீச்சிலும் 20 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துக் கட்டுக்கோப்பாகப் வீசியபோதிலும், போட்டியின் முடிவில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி கைநழுவிப் போனாலும், தீப்தி சர்மா பிடித்த அந்தப் பறக்கும் கேட்ச் இத்தொடரின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.