Connect with us

CINEMA

ALEXA-வின் உதவியோடு துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய பெண்.. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த பரிசு

தொழில்நுட்பம் நம்மை காப்பாறும், ஆம், தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது அதனால் நண்மையும் உண்டு, தீமையும் உண்டு. இதுவரை அதன் தீமைகளை பார்த்து வந்த உலகம் இப்போது அதன் நன்மையையும் பார்த்துள்ளது.

Nikitha saved her baby sister using alexa

   

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 13 வயது நிகிதா என்ற சிறுமி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன் குழந்தை தங்கையை காப்பாற்றியுள்ளார். உத்தரபிரதேசத்தில், ஒரு வீட்டின் கதவு திறந்து இருந்த நிலையில் குரங்குகள் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிட்சனில் உள்ள பொருட்களை தூக்கி எரிந்து அட்டூழியம் செய்துள்ளது. அப்போது அங்கு இருந்த சிறு குழந்தை இதை பார்த்து பயந்துள்ளது, ஆனால் அக்குழந்தையின் அக்கா துரிதமாக செயல்பட்டு அலெக்ஸ்சாவிடம் நாய் குறைக்கும் சப்தத்தை கேட்க, அலெக்ஸ்சாவும் நாய் குறைக்கும் சப்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சப்தத்தை கேட்ட குரங்குகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளன. அந்த சிறுமி இப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டு குழந்தை காப்பாற்றியுள்ளார். இதுகுறித்த செய்தி நாடெங்கும் காட்டுத்தீயாக பரவ, ஆனந்த் மஹேந்திரா இந்த சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லால் நிகிதாவுக்கு தன்னுடைய கேம்பெனியில் வேலை நிச்சயம் என்றும் அவள் படிப்பு முடித்தவுடன் இங்கு சேர்ந்து கொள்ளலாம் என்றும் ஒரு எதிர்பாராத பரிசை கொடுத்துள்ளார்.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top