திடீர் திருப்பம்….. இனி ஆட்டம் வேற மாதிரி… அதிமுகவிலிருந்து வெளியேறும் ராஜேந்திர பாலாஜி…. தென்மாவட்ட அரசியலில் பரபரப்பு….!

Spread the love

அதிமுகவின் தென்மாவட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியை திமுகவில் இணையுமாறு அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக உலா வரும் தகவல்கள், தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் தவெக மற்றும் திமுக இடையே இருதுருவ போட்டியாக மாறியுள்ளதாக அரசியல் கணக்குகள் போடப்படுகின்றன. இந்த சூழலில், எதிர்கால அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள கட்சி மாறுவதுதான் சரியான உத்தி என அவரது தீவிர ஆதரவாளர்கள் அவருக்கு ஆலோசனைகள் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, தனது அதிரடி பேச்சுகளுக்காகவும், தென்மண்டலத்தில் கட்சி அமைப்பை வலுவாகக் கொண்டு சென்றதற்காகவும் அறியப்பட்டவர். எனினும், கடந்த சில ஆண்டுகளாக உட்கட்சிப் பூசல்கள், ஊழல் வழக்குகள் மற்றும் தேர்தல் தோல்விகள் காரணமாக அவர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து சற்று விலகியே இருந்தார். விருதுநகர் மாவட்டத்தில் ஒருகாலத்தில் அதிமுகவின் எஃகு கோட்டையாக திகழ்ந்த சூழல் மாறி, சமீபத்திய தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, விருதுநகர் மாவட்ட திமுகவின் முக்கிய முகமாக இருக்கும் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் வயது முதிர்வு மற்றும் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திமுகவின் உத்தி ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி ஆதரவாளர்கள் காய்களை நகர்த்துகின்றனர். ராஜேந்திர பாலாஜி திமுகவுக்குச் சென்றால், மாவட்டத்தில் கட்சியை வழிநடத்தும் முக்கிய பொறுப்பு அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆதரவாளர்கள் எடுத்துரைத்து வருகின்றனர். வழக்கு காலங்களில் அதிமுக தலைமை போதிய ஆதரவு அளிக்கவில்லை என்ற ஆதங்கமும் இதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், “உயிர் மூச்சு உள்ளவரை எனக்கு முகவரி தந்த அதிமுகவிலேயே நீடிப்பேன்” என்று ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார். தற்போது, தன்னை வளர்த்தெடுத்த அதிமுகவின் விசுவாசமா அல்லது ஆதரவாளர்களின் அழுத்தத்தால் எதிர்கால அரசியலுக்கான திமுக முடிவா என்ற தர்மசங்கடமான சூழலில் அவர் உள்ளார். ராஜேந்திர பாலாஜியின் அடுத்தகட்ட முடிவு தென்மாவட்ட அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Nanthini

Recent Posts

“பாவம் அந்த பிஞ்சு குழந்தை…” ஸ்கூலில் நண்பர்களுடன் விளையாடிய கடைசி நொடி… விஷப்பாம்பு கடித்து பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் உள்ள எக்னாஸ்பூர் அரசுப் பள்ளியில் பெரும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள வகுப்பறை…

20 minutes ago

அம்மா அம்மா!அழுது தவித்த குழந்தை…போதையில் வீதியில் கிடந்த தாய்… ஓடிவந்து உதவிய பொதுமக்கள்…நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

வீதியின் ஓரத்தில் சுயநினைவற்று கிடக்கும் தன் தாயை எழுப்பத் துடிக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகை, காண்போர் நெஞ்சை உலுக்குவதாக…

31 minutes ago

ஐயோ…! பார்க்கவே பதறுது…! வீட்டு வாசலில் இருந்த சிறுமி… கார் சக்கரத்தில் சிக்கி துடித்த சோகம்… அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ரசூல்பாத் பகுதியில் உள்ள நேரு நகரில், தனது வீட்டின் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு…

32 minutes ago

“மின்னல் வேகம்… அலறிய பயணிகள்…” 5 வாகனங்கள் மீது மோதி சீறிப்பாய்ந்த தனியார் பேருந்து… 2 பேர் துடிதுடித்து பலி…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே உள்ள பறையம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து…

50 minutes ago

“சின்ன பையன்னு பார்த்தது தப்பா போச்சே…” பெண்களுடன் வந்த சிறுவன்… சிசிடிவியை பார்த்து ஆடிப்போன ஓனர்… போலீஸ் வலைவீச்சு…!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தண்டூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான நகைக்கடையில் 5 பேர் கொண்ட கும்பல்…

1 மணத்தியாலம் ago

“என்ன விட்டுரு… ப்ளீஸ்…” கெஞ்சிய 17 வயது மாணவி…. கழுத்தறுத்து கொன்று அருகிலேயே கிடந்த காதலன்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…

1 மணத்தியாலம் ago