பணமா? பாசமா?.. 12 ஆயிரத்துக்காக நண்பனை நிர்வாணமாக்கி கொன்ற கொடூரம்…போடியில் அரங்கேறிய பகீர் கொலை…!!

Spread the love

தேனி மாவட்டம் போடியை அடுத்த சிலமலை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், கடந்த 4ஆம் தேதி இரவு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். தனது மகனை காணவில்லை என அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அம்மாபட்டி – பெருமாள்கவுண்டன்பட்டி சாலையிலுள்ள ஒரு தென்னந்தோப்பில் உள்ள கிணற்றின் அருகே ஜெயக்குமாரின் ஆடைகள் மற்றும் செருப்புகள் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றுக்குள் தேடியபோது, காயங்களுடன் அரைகுறை ஆடையுடன் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நண்பர்களுக்குள் ஏற்பட்ட அபராதப் பணத் தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது அம்பலமானது. கடந்த ஜூன் மாதம் ஜெயக்குமார், சின்னமனூரைச் சேர்ந்த தனது நண்பரான விக்னேஷின் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, மதுபோதையில் இருந்ததால் போக்குவரத்து காவல்துறையினரால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. வாகனத்தை மீட்க ஆன மொத்த செலவான ரூ.12,000 தொகையைத் தான் கொடுத்துவிடுவதாகக் கூறிய ஜெயக்குமார், நீண்ட நாட்களாகியும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் விக்னேஷை அலைக்கழித்ததுடன் அவரது அழைப்புகளையும் தவிர்த்து வந்துள்ளார்.

பணத்தை ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ், தனது மற்றொரு நண்பரான ஹரிபிரசாத்துடன் சேர்ந்து சம்பவத்தன்று இரவு ஜெயக்குமாரைத் தேடிச் சென்றுள்ளார். மதுபானக் கடை அருகே இருந்த ஜெயக்குமாரை சமாதானம் பேசுவது போல் தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்ற இருவரும், அங்கு வைத்து அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஜெயக்குமாரின் ஆடைகளை அவிழ்த்து, சொட்டுநீர்ப் பாசனக் குழாய்களால் அவரது கை கால்களைக் கட்டிக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர் மயக்கமடைந்ததும், 110 அடி ஆழமுள்ள கிணற்றில் ஈவுஇரக்கமின்றி வீசிக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர். உசிலம்பட்டியில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்த போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Gayathri

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago