Categories: சினிமா

ஆபாச படத்தில் நடித்தேனா நான்..? என்னை சித்திரவதை செய்கிறார்கள்.. கண்ணீர் விட்டு கதறிய நடிகை ரோஜா..!!

Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரோஜா கடந்த 1998-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அந்த கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருந்த ரோஜா நகரி மற்றும் சந்திரகிரி சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை ரோஜா ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஒய் எஸ் ஆர் மறைந்த பிறகு தனி கட்சி தொடங்கிய ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் ரோஜா இணைந்தார். அதன் பிறகு 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சராக இருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவரான பண்டாரோ சத்திய நாராயணமூர்த்தி நடிகை ரோஜா ஆபாச படங்களில் நடித்ததாக பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகை ரோஜா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது ரோஜா கூறியதாவது, தெலுங்கு தேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டு பொருளாக பார்க்கின்றனர். உங்கள் வீட்டுப் பெண்களை இப்படி அவதூறாக பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா என கண்ணீர் விட்டு அழுதார்.

இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி தன்னை சித்திரவதை செய்வதாகவும், அது போன்ற படத்தில் நடித்தவள் என்றால் சந்திரபாபு நாயுடு ஏன் என்னை தெலுங்கு தேசம் கட்சியில் சேர்த்தார் என ரோஜா கேள்வி எழுப்பினார். தன்னை அவதூறாக பேசும் தெலுங்கு தேசம் கட்சியினரை சந்திரபாபு நாயுடுவும் அவரது மகனும் கண்டிக்காதது ஏன்? தன்னைப் பற்றி பேசும் தெலுங்கு கட்சியின் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக ரோஜா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

admin

Recent Posts

“போட்ட பணம் டபுளா திரும்பி வரும்…” கோடிகளில் கூட சேமிக்கலாம்… நடுத்தர மக்களுக்கான அசத்தலான திட்டம்…!!

தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…

16 minutes ago

மின்னஞ்சல் அனுப்பினாலே போதும்…! கைநிறைய சம்பளத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை… விண்ணபிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…

35 minutes ago

“கூல் டிரிங்க்ஸ் வேண்டாம்…” கோடை வெயிலில் குழந்தைகளைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் அட்வைஸ்…!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…

50 minutes ago

ஐடி ஊழியர்களே உஷார்…! குனிந்து வேலை பார்ப்பதால் கழுத்து எலும்பில் தேய்மானமா…? இதோ எளிய தீர்வுகள்…!!

தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…

59 minutes ago

நிதி நெருக்கடி தீரும்; செல்வம் பெருகும்….! யமனின் வக்கிர பெயர்ச்சியால் ஜொலிக்கப்போகும் ராசிகள்… உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…

1 மணத்தியாலம் ago

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

2 மணத்தியாலங்கள் ago