பாலிவுட் முன்னணி நடிகரான ரன்பீர் கபூருக்கு சத்தீஸ்வரர் மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த மஹாதேவ் சூதாட்ட செயலி சட்ட விரோத சூதாட்டம் நிறுவனங்கள் இயங்குவதற்கான வலைதளங்களை ஏற்பாடு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.
அந்த நிறுவனத்திற்கு சதீஷ்கரின் சௌரம் சந்திரக்கர், ரவி உப்பால் ஆகியோர் உரிமையாளர்களாக செயல்பட்டுள்ளனர். அதன் மத்திய தலைமை அலுவலகம் துபாயில் இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் புதிய பயனர்களை சேர்த்து பினாமி வங்கி கணக்குகளின் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக இணைய வழி சூதாட்ட செயலியை இந்த நிறுவனம் உபயோகப்படுத்தி வருவதாக அமலாக்கத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது.
மேலும் இந்த சூதாட்டம் செயலியை விளம்பரப்படுத்த ரன்பீர் கபூர் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களிடமிருந்து பணம் வாங்கியது உறுதியானது. இதனால் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 15 பிரபலங்கள் அமலாக்க துறையின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களுக்கும் கூடிய சீக்கிரம் சம்மன் அனுப்பப்படும் எனவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…