நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது இவர்கள் தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வருகிறார் நடிகை நயன்தாரா.
தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 9skin என்ற கம்பெனி ஒன்றையும் புதிதாக தொடங்கியுள்ளார் நடிகை நயன்தாரா. இப்படி பிசினஸ் , சினிமா என பிசியாக இருந்தாலும் அவ்வப்பொழுது தனது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக கணக்கு ஒன்றை தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து அந்த பக்கத்தில் அவர் அவ்வப்பொழுது தனது குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும், கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் தன் குழந்தைக்கு மசாஜ் செய்து வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ஊருக்கே பெரிய நடிகையானாலும், தன் பிள்ளைக்கு அன்பான அம்மா தான்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…