ஊருக்கே பெரிய நடிகையானாலும், தன் பிள்ளைக்கு அன்பான அம்மா தான்… வைரலாகும் நயன்தாராவின் கியூட் வீடியோ…

By Begam

Updated on:

நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.  முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

தற்பொழுது இவர்கள் தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வருகிறார் நடிகை நயன்தாரா.

தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 9skin என்ற கம்பெனி ஒன்றையும் புதிதாக தொடங்கியுள்ளார் நடிகை நயன்தாரா. இப்படி பிசினஸ் , சினிமா என பிசியாக இருந்தாலும் அவ்வப்பொழுது தனது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக கணக்கு ஒன்றை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து அந்த பக்கத்தில் அவர் அவ்வப்பொழுது தனது குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும், கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் தன் குழந்தைக்கு மசாஜ் செய்து வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ஊருக்கே பெரிய நடிகையானாலும், தன் பிள்ளைக்கு அன்பான அம்மா தான்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…