Connect with us

CINEMA

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர் ஸ்டார் நடிகர்களே இல்லாத நிலை இருந்தது. அக்காவின் புகழ் உச்சத்தில் இருக்கும் போது அவரின் தங்கையான மோனல் சினிமாவில் அறிமுகமானார்.

விஜய் நடிப்பில் உருவான பத்ரி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மோனல் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கதாநாயகியாக நடித்த பார்வை ஒன்றே போதுமே திரைப்படம் ரிலிஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தின் வெற்றியால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

   

லவ்லி, சமுத்திரம் மற்றும் இஷ்டம் மற்றும் சார்லி சாப்ளின் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். அந்த படங்கள் அவருக்கு சராசரியான வெற்றியைத் தந்து அவரை முன்னணி கதாநாயகி ஆக்கின. இந்நிலையில் அவர் திடீரென்று ஏப்ரல் 14 2002 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் தற்கொலை செய்துகொண்ட அன்று அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தற்கொலைக்கு காரணம் நடன இயக்குனர் பிரசன்னா சுஜித் என்பவர்தான் என்று சிம்ரன் குற்றச்சாட்டை வைத்தார். இருவரும் காதலித்து வந்ததாகவும் பிரசன்னா மோனலை பிரிந்ததுதான் அவரின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட போது மோனலுக்கு வயது 21 தான்.

ஆனால் அதன் பின்னர் மோனல் தற்கொலை விவகாரம் அமைதியானது. இன்று வரை அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று வெளியுலகுக்கு தெரியவில்லை. அவர் தொடர்ந்து நடித்திருந்தால் தன்னுடைய அக்கா சிம்ரனைப் போல அவரும் ஒரு முன்னணி நடிகையாக வந்திருக்க வாய்ப்புள்ளது. ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, மோனல் பல நடிகைகள் தற்கொலை செய்துகொண்டது பரிதாபகரமான சோகமாக உள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top