பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா.. வீடியோவை வெளியிட்ட முன்னாள் கணவர் கார்த்திக் குமார்.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

By Mahalakshmi on மே 15, 2024

Spread the love

பிரபல பாடகியான சுசித்ரா தனது கணவர் மீதும், தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களின் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருவது வைரலாகி வருகின்றது. பாடகி சுசித்ரா தனது கணவர் ஓரின செயற்கையாளர் என்று கூறிய நிலையில் அதற்கு அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் வீடியோ மூலமாக பதில் கொடுத்துள்ளார்.

ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பல பாடல்களை பாடி பிரபலமானவர்தான் பாடகி சுசித்ரா. தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, ஸ்ரேயா, மாளவிகா, லட்சுமி ராய் போன்ற பல நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியிருக்கின்றார். தமிழில் இவர் முதன்முதலாக லேசா லேசா என்ற பாடல் மூலமாக பாடகியாக அறிமுகமானார்.

   

   

அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட பாடல்களை பாடி இருக்கின்றார் இவர் யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்த நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். 2005 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிறந்தனர். 2016 ஆம் ஆண்டு இவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் சுசி லீக்ஸ் என்ற பெயரில் பல நடிகர் நடிகைகளை பற்றிய பல விஷயங்கள் பகிரப்பட்டது.

 

இது குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் சுசித்ரா. அதில் என் கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து என்னுடைய பாஸ்வேர்டை திருடி நடிகர், நடிகைகள் பற்றிய பல விஷயங்களை போட்டு என்னை சிக்க வைத்து விட்டார்கள். என்னுடைய கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். திருமணமான ஒரு வருடத்திலேயே அதை நான் கண்டுபிடித்து விட்டேன். என் கணவரும் தனுஷின் நள்ளிரவு மூன்று மணிக்கு ஒரே அறையில் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.

அதைக் குறித்து அவர்கள் இருவரில் யாராவது ஒருவர் விளக்கம் அளிக்க வேண்டும். எனக்கும் கார்த்திக்கும் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். இதனால் நான் அவரிடம் காதலை எதிர்பார்க்கவில்லை. நான் தான் முதல் வருடத்தில் இருந்தே விவாகரத்து கேட்டேன். பின்னர் 12 வருடங்கள் எப்படியோ ஓடிவிட்டது. தற்போது நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறுகின்றார்.

இந்நிலையில் அவரது கணவரை ஓரின செயற்கையாளர் கூறியதற்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார் நடிகர் கார்த்திக் குமார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ” செக்ஸ் என்ற விஷயம் தனிப்பட்டவர்களுடைய விருப்பம். நான் ஓரின செயற்கையாளராக இருந்தால் தைரியமாக அதை சொல்லி இருப்பேன். மறைத்து வைக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது.

 

View this post on Instagram

 

A post shared by Karthik Kumar (@evamkarthik)

 

சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கலந்து கொள்ளும் பிரைட் மார்க் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதால் நான் ஓரின செயற்கையாளராக இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. அவர்களுக்கு நான் சப்போர்ட் செய்கிறேன். அப்படி இருந்தால் நான் ஆமாம் என்று சந்தோசமாக கூறுவேன். அதை வெளியில் சொல்வதற்கு எனக்கு எந்த அசிங்கமும் கிடையாது” என்று கார்த்திக்குமார் பேசியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Karthik Kumar (@evamkarthik)