Connect with us

ஷூட்டிங் லேட்டா போனா எம் ஜி ஆரை சமாளிக்குறது ஈசி.. ஆனா சிவாஜிகிட்ட கஷ்டம்.. ஜாலியான அனுபவத்தைப் பகிர்ந்த நாகேஷ்..

CINEMA

ஷூட்டிங் லேட்டா போனா எம் ஜி ஆரை சமாளிக்குறது ஈசி.. ஆனா சிவாஜிகிட்ட கஷ்டம்.. ஜாலியான அனுபவத்தைப் பகிர்ந்த நாகேஷ்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார். அவருக்கு பின் ஒருவர் வர முன்னணில் இருந்தவரின் மார்க்கெட் காலியாகும். அப்படி சந்திரபாபுவுக்கு அடுத்து முன்னணி நகைச்சுவை நடிகராக வந்தவர் நாகேஷ்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.

   

இதுபற்றி ஒரு நேர்காணலில் நாகேஷ் ஜாலியாக பதிலளித்துள்ளார். ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவரிடம் ”ஷூட்டிங்குக்கு தாமதமாக சென்றால் எம்.ஜி.ஆர், சிவாஜியை எப்படி சமாளிப்பீர்கள்” என்று கேட்டுள்ளனர். அதற்கு நாகேஷ் “எம்.ஜி.ஆரை சமாளிப்பது எளிது. நான் எந்த சூழ்நிலையில், எப்படி நடிக்க வருகிறேன் என்று அவருக்கு நன்கு தெரியும் என்பதால், படப்பிடிப்பில் நான் நடிக்கும் காட்சிளை மட்டும் விட்டுவிட்டு மற்ற காட்சிகளை படமாக்க சொல்வார். நான் சென்றதும் என் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க சொல்வார்.

 

ஆனால் சிவாஜியை சமாளிப்பது எளிதான விஷயம் இல்லை. அவர் நேரடியாக எதுவும் கேட்கமாட்டார். இடைவேளை நேரத்தில் சாப்பிடும்போது அல்லது வேறு ஏதேனும் சமயத்தில் ஜாலியாக இருக்கும்போது மறைமுகமாக நான் லேட்டாக வந்தது குறித்து சொல்லிவிடுவார். “ என பதிலளித்துள்ளார்.

Continue Reading
To Top