மலையாளத்தில் முதன் முதலாக நடித்து அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். அதை தொடர்ந்து சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வளம் வந்த இவருக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் அந்த அளவுக்கு அமையவில்லை. தெலுங்கில் இவர் நடித்த மகாநடி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது. தமிழ் படத்தை தாண்டி தற்போது கீர்த்தி சுரேஷின் பேபி ஜான் திரைப்படம் வாலிவுட்டில் வெளியானது. இதனையடுத்து இவர் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விட்டு வந்தார்கள்.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவர் குறித்து முதல் முறையாக பேசி உள்ளார். அதில், “சோசியல் மீடியா பக்கத்திலிருந்து ஒதுங்கி இருக்கும் என்னுடைய கணவருக்கு இது புதுசு. இன்ஸ்டாகிராமையை அவர் பிரைவேட் ஆக தான் வைத்துள்ளார் . அவர் கூச்ச சுபாவம் கொண்டவர். மீடியா அட்டென்ஷன் கிடையாது. எனக்கு பழகிவிட்டது.
எங்கு சென்றாலும் போட்டோ, வீடியோ எடுக்குறாங்க. எனக்கு எப்போதும் போலவே உள்ளது. என்னுடைய கணவருக்கு இந்த விஷயம் தான் சங்கடத்தை கொடுக்கிறது. ஆனாலும் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு இது முக்கியம் என்பதை அவர் புரிந்து அதற்கு ஏற்றபடி நடந்து கொள்கிறார் “என்று கூறியுள்ளார்
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…