பாவம் என்னால அவருக்கு தான் சங்கடம்… திருமணமான ஒரே மாதத்தில் கணவர் குறித்து ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ்..!

By Soundarya on தை 24, 2025

Spread the love

மலையாளத்தில் முதன் முதலாக நடித்து அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். அதை தொடர்ந்து சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார்.

   

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வளம் வந்த இவருக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் அந்த அளவுக்கு அமையவில்லை. தெலுங்கில் இவர் நடித்த மகாநடி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது. தமிழ் படத்தை தாண்டி தற்போது கீர்த்தி சுரேஷின் பேபி ஜான் திரைப்படம் வாலிவுட்டில் வெளியானது. இதனையடுத்து இவர் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை   திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி  ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விட்டு வந்தார்கள்.

   

 

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவர் குறித்து முதல் முறையாக பேசி உள்ளார். அதில், “சோசியல் மீடியா பக்கத்திலிருந்து ஒதுங்கி இருக்கும் என்னுடைய கணவருக்கு இது புதுசு. இன்ஸ்டாகிராமையை அவர் பிரைவேட் ஆக தான் வைத்துள்ளார் . அவர் கூச்ச சுபாவம் கொண்டவர். மீடியா அட்டென்ஷன் கிடையாது. எனக்கு பழகிவிட்டது.

எங்கு சென்றாலும் போட்டோ, வீடியோ எடுக்குறாங்க. எனக்கு எப்போதும் போலவே உள்ளது. என்னுடைய கணவருக்கு இந்த விஷயம் தான் சங்கடத்தை கொடுக்கிறது. ஆனாலும் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு இது முக்கியம் என்பதை அவர் புரிந்து அதற்கு ஏற்றபடி நடந்து கொள்கிறார் “என்று கூறியுள்ளார்